search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேர் நிலை சேர்ந்தது
    X

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேர் நிலை சேர்ந்தது

    • தேர்க்கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நிகழ்ச்சி நடை பெற்றது.
    • தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழா 1-ந் தேதி தொடங்கியது. 19-ந் தேதி சுவாமி திருத்தேருக்கு எழுந்தருள செய்தல், அதை தொடர்ந்து பக்தர்கள், தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். நேற்று முன்தினம் 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது, 3-வது நாளான நேற்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. பிறகு சுவாமி தேர்க்கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் வரும் மார்ச் மாதம் 6-ந் தேதி வரை கோவில் குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெற உள்ளது. தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்களும், முதன்மைதாரர் நற்பணி மன்றத்தினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் செய்திருந்தனர்.

    Next Story
    ×