search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில் கத்தியுடன் நடனமாடிய வீரக்குமாரர்கள்
    X

    சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில் கத்தியுடன் நடனமாடிய வீரக்குமாரர்கள்

    • ஓசக் கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
    • சேலம் குகை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீரக்குமார்கள் குழுவினர் கோயில் வளாகத்தில் உடலில் கத்தி போட்டு நடனமாடினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே ஓசக் கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த கோவிலுக்கு நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர்.

    அதன்படி, நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டு 44-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் சேலம் குகை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீரக்குமார்கள் குழுவினர் கோயில் வளாகத்தில் உடலில் கத்தி போட்டு நடனமாடினர்.

    ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மனுக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்தனர். மாலையில் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×