என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் போலீஸ், பிரஸ் என போலி ஸ்டிக்கர் ஒட்டி உலா வரும் வாகனங்கள்

- போலீஸ், பிரஸ் என போலி ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது சிலர் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவும், குற்ற செயல்களில் செய்து விட்டு தப்பி செல்வதற்காவும் தங்களது இருசக்கர வாகனங்களில் போலீஸ் என்றும் பிரஸ் மற்றும் மீடியா போன்ற போலி ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து கொண்டு உலா வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;- போலி ஸ்டிக்கர் ஒட்டியுள்ள நபர்கள் சில இடங்களில் அப்பாவி பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தும், சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குடித்து விட்டும் வாகனம் ஓட்டுகின்றனர்.
சிலர் அதனை செய்பவர்களுக்கும் உடந்தையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகி்றது. இது போன்ற நபர்களால் போலீசாருக்கும் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இ்ந்த போலி ஸ்டிக்கர் ஒட்டிள்ள நபர்கள் நடந்து கொள்கிறார்கள். மேலும் தருமபுரி, அரூர், பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளில் இதுக்கு தனியாக போலீசாரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டி வரும் நபர்களை பிடித்து, அவர்கள் அடை யாள அட்டை மற்றும் அவர்களது முகவரியை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.