search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒடுகத்தூர் அருகே அட்டகாசம் செய்த 25 குரங்குகள் பிடிப்பட்டது
    X

    ஒடுகத்தூர் அருகே அட்டகாசம் செய்த 25 குரங்குகள் பிடிப்பட்டது

    • பொதுமக்கள் மகிழ்ச்சி
    • வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சில மாதங்க ளாகவே அதிகப்படியான குரங்குகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இவை அங்கு இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதும், வீடு, கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும், மேலும் குழந்தைகளை மிரட்டி வருவதுமாக அட்டகாசத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே இருந்து வந்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதியிடம் கூறினர். சுகன்யா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வனத்துறை அதிகாரிகளிடம் சென்று குரங்கு பிடிக்கும் கூண்டினை பெற்றுக்கொண்டு அப்பகுதி இளைஞர்களின் மூலம் சுமார் 25 குரங்குகள் பிடிக்கப்பட்டது.

    பின்னர் அருகே இருந்த தீர்த்தம் வனப்பகுதியில் கொண்டு போய் பிடிப்பட்ட குரங்குகளை பத்திரமாக கொண்டு போய் விட்டனர். இந்த செயலால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    Next Story
    ×