என் மலர்
உள்ளூர் செய்திகள்
வேலூர் புதிய பஸ் நிலைய நுழைவு வாயிலில் கூடுதல் மின் விளக்கு பொருத்த வேண்டும்
- இருட்டில் தவிக்கும் பயணிகள்
- காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறதுஎஎ8520
வேலூர்,
வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். இதன் முகப்பு கட்டிடத்தில் 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
வெளியில் 1450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி, பஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 300 கார்கள் வரை நிறுத்த முடியும்.
மேற்கு பக்கம் 2 நுழைவு வாயில், கிழக்கு பக்கம் ஒரு நுழைவு வாயில் உள்ளது.மின் சிக்கனத்திற்காக பஸ் நிலையம் முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படுகிறது. 4 உயர் கோபுர விளக்குகள் உள்ளன.
கிழக்கு பகுதியில் செல்லியம்மன் கோவில் அருகே மின்விளக்கு குறைவாக இருக்கும் காரணத்தினால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த பகுதியில் தற்போது ஒரு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வெளிச்சம் போதுமானதாக இல்லை. காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
செல்லியம்மன் கோவில் நுழைவு வாயிலில் மின் விளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. கோவிலுக்கு பின்புறம் பஸ் நிலைய வளாகத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது
காட்பாடியில் இருந்து ரெயில்களில் வரும் பொது மக்கள் இரவு நேரங்களில் புதிய இறங்கி செல்லியம்மன் கோவில் முன்பு பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். நுழைவு வாயில் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.
இதனை தடுக்க செல்லியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.