search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் மீது தாக்குதல்
    X

    கோப்புப்படம்

    படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் மீது தாக்குதல்

    • டிரைவர், கண்டக்டரை உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு
    • போலீசில் புகார்

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தில் இருந்து குடி யாத்தம் நோக்கி நேற்று முன் தினம் மாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால், உள்ளே மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடம்விட்டு, படியில் நின்றபடி மாணவர்கள் வந்தனர். அவர்களை டிரைவர் திருநாவுக்கரசு, கண் டக்டர் கோட்டீஸ்வரன் ஆகியோர் பலமுறை எச்சரிக்கை செய்தனர். அவர்கள் தொடர்ந்து படிக்கட்டிலேயே பயணம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பஸ்சை நிறுத்திவிட்டு இறங்கி வந்த கண்டக்டர், மாணவர்களை கீழே இறங்கும்படி கூறி வாக்குவாதம் செய்தார். அதற்கு மறுத்த ஒரு மாணவரை கண் டக்டர் கன்னத்தில் அடித்த தாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அந்த மாணவர் கீழ் ஆலத்தூரில் இறங்கினார். அவர் தாக்கப்பட்ட தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் பஸ்நிறுத்தத்திற்கு விரைந்து பஸ் குடியாத்தம் சென்று திரும்பி வரும் வரை காத்திருந்தனர்.

    பஸ் வந்ததும் பஸ்சை நிறுத்தி கண்டக்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த டிரைவரும் தாக்கப்பட்டார்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×