search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருக்களை விட உயரமாக கால்வாய் கட்ட கூடாது
    X

    வேலூர் சேண்பாக்கத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தெருக்களை விட உயரமாக கால்வாய் கட்ட கூடாது

    • மேயரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ரூ.1.22 கோடி மதிப்பில் பணிகள் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 722 மீட்டர் தூரத்திற்கு ரூ 1.22 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் தெருக்களில் உள்ள கால்வாய் விட அதிக உயரத்திற்கு கால்வாய் கட்டப்படுவதால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே கால்வாய் உயரத்தை குறைத்து கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மேயர் சுஜாதா கால்வாய் கட்டும் ஒப்பந்ததாரரிடம் இது எனது வார்டு, எனவே பொதுமக்கள் குறை கூறும் அளவிற்கு இல்லாமல் பணிகளை செம்மையாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதை எடுத்து சேம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெறும் பாதாள சாக்கடை வெட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மாநகராட்சி என்ஜினீயர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×