search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • அதானி குழும மோசடிகளை விசாரிக்க குழு அமைக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், அதானி குழுமத்தில் பல்லாயிரம் கோடி பங்கு சந்தை மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வேலாயுதம், ஜீவா, அஷ்ரப்அலி, மகாலிங்கம், தங்கவேலு, மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஒன்றிய செயலாளர் டி.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

    தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க தலித்பாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது பட்ஜெட்டை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழை, எளியவர்கள், மக்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளதை கண்டித்தும்.

    தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், சிறு குரு நடுத்தர தொழில் முனைவோர், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் வாழ்க்கை நலனுக்கு எவ்வித உத்தரவாதம் தராத பட்ஜெட்டை கண்டித்தும்.

    கிராமப்புற வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியைகூட ஒதுக்காமல் குறைக்கப்பட்டதை கண்டித்தும்.

    அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு சந்தை மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழுவை அமைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×