என் மலர்
உள்ளூர் செய்திகள்
முன்விரோத தகராறில் 3 பேருக்கு வெட்டு
- இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்த சேர்ந்தவர்கள் சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோர் நண்பர்கள்.
இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் இருதரப்பி னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
அப்போது மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோர் சேர்ந்து, சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோரை உடைந்த மது பாட்டில் மற்றும் பிளேடால் சரமாரியாக ஆங்காங்கே வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.