search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் பிரமாண்ட புத்தக கண்காட்சி
    X

    புத்தக கண்காட்சியை அமைச்சர் துரைமுருகன் ெதாடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

    வேலூரில் பிரமாண்ட புத்தக கண்காட்சி

    • அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
    • 100 அரங்குகளில் 20 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர் நேதாஜி மைதானத்தில் மாவட்ட நிர்வாகமும் பொது நூலகத்துறை புத்தகத் திருவிழா இன்று முதல் வருகிற 6-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி, பொருளாதாரம் அரசியல், வரலாறு உட்பட பல்வேறு சுமார் 20 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன

    அமைச்சர் துரைமுருகன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    அவர் பேசியதாவது:-

    புத்தகங்களை படிப்பதால் மொழி பற்று வருகிறது, இனப் பற்று வருகிறது, நாட்டுப் பற்று வருகிறது.

    வாசிப்பு பழக்கம் மாணவர்களை ஒழுக்கம் உடையவர்களாக மாற்றுகிறது.

    ஆசிரியர்கள் மாணவர்க ளுக்கு விளையாட்டுடன் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

    தொடர்ந்து புத்தங்களை படித்தவர்கள் எல்லாம் தலைவர் ஆகிஉள்ளனர்

    கருணாநிதி ஆட்சியின் போது சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே புத்தக பதிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் புத்தகசாலை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது பதிப்பாளர்களிடையே ஒற்றுமை இல்லாததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அந்த திட்டத்தை உயிர்ப்பித்து புத்தக பதிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முதல் நாளான இன்று புத்தக கண்காட்சியை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவிகள் பார்வை யிட்டனர். அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.இந்த புத்தக கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×