search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் 16,970 மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்
    X

    வேலூர் மாவட்டத்தில் 16,970 மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்

    • 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
    • பறக்கும் படை தீவிர கண்காணிப்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,970 மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

    வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் 6 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அறைக்கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8,247 மாணவர்கள், 8,723 மாணவிகள் என்று மொத்தம் 16,970 மாணவ,மாணவிகள் எழுதுகிறார்கள்.

    அவர்கள் தேர்வு எழுதுவதற்காக 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள உள்ளன. தேர்வவு மையங்களை கண்காணிக்க 81 முதன்மை கண்காணிப்பாளர்கள், 81 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வில் காப்பியடிப்பவர்களை பிடிக்கவும், ஆள்மாறாட்டத்தை கண்டறியவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 89 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர கலெக்டர், வருவாய் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

    வினாத்தாள்கள் 19 வழித்தடங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.தேர்வு தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

    முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கும் 5 நிமிடமும் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடைபெறும்.

    தேர்வு மையங்களில் இருந்து முன்கூட்டியே மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×