search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமபுற ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை
    X

    விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்த காட்சி.

    கிராமபுற ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் கி.வேண்டா தலைமை தாங்கினார். தேர்தல் தனிப்பிரிவு தாசில்தார் திருக்குமரேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:-

    தற்போது விலையில் வின்னைத்தொட்டு இருக்கும் தக்காளி நகரப் புறத்தை தொடர்பு கிராம புரத்தில் உள்ள அணைத்து ரேஷன் கடையிலும் கொடுக்க வேண்டும். விவசாய பம்பு செட்டுக்கு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்,

    பிறப்பு இறப்பு சான்றிதழ் வந்தால் உடனடியாக பயனாளிகளிடம் கொடுக்க வேண்டும், சேர்ப்பாடி கூட்டுறவு சங்கத்தில் நடவை இயந்திரம் மற்றும் அறுவடை இயந்திரம் கொடுக்க வேண்டும், ஒடுகத்தூரில் இருந்து மேல் அரசம்பட்டு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். குரங்குகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

    தற்போது வழங்கப்படும் ஆட்டுக் கொட்டகைகளை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பி னர்களே எடுத்துக் கொள்வதாக கூட்டத்தில் ஆதங்கமாக பேசி விவசாயிகள் கண்ணீர் விட்டனர்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு பிடிஓ நேரடியாக வந்து உரிய பதிலளிக்க வேண்டும் என விவசாயிகள் அங்கேயே அமர்ந்து கூட்டத்தை நடக்க விடாமல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிடிஓ சாந்தி அடுத்த கூட்டத்திற்குள் உரிய பதிலளிக்கப்படும் என தெரிவித்ததனால் கூட்டம் சிறிது நேரத்திற்க்கு பின் தொடர்ந்து நடைபெற்றது.

    Next Story
    ×