என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்
- வண்ணம் தீட்டும் பணியில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்
- களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது
வேலுார்:
நவராத்திரி பண்டிகை, வருகிற அக். 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.
இதன் முக்கிய நிகழ்வாக, கொலு வைக்கப்படும்.
இதையொட்டி, வேலுார் கொசப்பேட்டை பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. குறைந்தபட்சம் 3 அங்குலம் முதல் அதிகபட்சம் 4 அடி வரையிலான மண் பொம்மைகளை தயார் செய்து, அதற்கு வண்ணம் தீட்டும் பணியில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பொம்மை தயாரிப் பாளர்கள் கூறியதாவது:-
நவராத்திரிக்கு பொம்மை தயாரிக்கும் பணியை ஆண்டுதோறும் டிசம்பர் மாதமே தொடங்கி விடுவோம்.
களிமண் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொம்மைகளை, 3 மாதங்கள் நிழலில் உலரவைத்து, அதன் ஈரப்பதம் குறைந்தபிறகு சூளையில் வைத்து சுடப்படும்.
பின்னர், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி நடக்கும். ஒரு பொம்மையை முழுமையாக தயார் செய்ய 10 மாதகாலம் உழைப்பு தேவைப்படுகிறது.
வேலுாரில் தயார் செய்யப்படும் இந்த பொம்மைகள், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை ரகத்துக்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது.
பிளாஸ்டர் ஆப் பாரீஸ் எனும் ரசாயன கலவையால் தயார் செய்யப்படும் பொம்மைகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், களிமண்ணால் செய்யப்பட்ட இந்த பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.