search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்யும் மாணவிகள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்
    X

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசிய காட்சி.

    கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்யும் மாணவிகள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்

    • கலெக்டர் அறிவுரை
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் டி. கே.எம். மகளிர் கல்லூரியில் இன்று நடந்தது.

    விழிப்புணர்வு கூட்டம்

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பது குறித்து தெரிவித்துள்ளனர்.இந்த கருத்துக்களை உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தைகள் பெண்களுக்கு எதிராக யார் மூலம் குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியும்.அப்படி நடந்து கொள்பவர்களை முன்கூட்டியே அறிந்து அவர்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் தங்களது குறிக்கோள் ஒன்றே கடமையாகக் கொண்டு அதனை நோக்கி நடை போட வேண்டும்.

    தற்போது கல்வி, வருங்காலத்தில் என்ன வேலை பார்க்கப் போகிறோம் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

    இந்தக் கட்டத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் கவனத்தை சிதறவிடாமல் செயல்பட வேண்டும்.

    சின்ன சின்ன ஆசைகள் மூலம் உங்களுடைய குறிக்கோள்களை இழந்து விடக்கூடாது.தற்காலிகமாக வரக்கூடிய ஆசைகளை கடந்து செல்பவர்கள் தான் சமூகத்தில் முக்கியமானவர்களாகவும் சமூக கட்டமைப்பை உருவாக்குபவர்களாகவும் வருவார்கள்.

    எதிர்த்து போராட வேண்டும்

    உங்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் அதைக் கொண்டு பயந்து விடக்கூடாது.தைரியமாக எதிர்த்து போராட வேண்டும்.

    கல்லூரி காலங்களை கடந்து தான் நாங்களும் வந்திருக்கிறோம்.கல்லூரி படிக்கும் காலத்தில் திருமணம் செய்து கொண்ட சிலர் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அது போன்ற நிலை உங்களுக்கு வந்து விடக்கூடாது.

    கவனத்தை சிதறவிடாமல் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தாசில்தார் செந்தில், கல்லூரி தாளாளர் மணி நாதன் மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, குடும்ப நல பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, டி கே எம் கல்லூரி முதல்வர் பானுமதி, வக்கீல் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×