என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூர் கோட்டையில் வருகிற 30-ந் தேதி சூரசம்ஹார விழா
- மாலை 6.30 மணிக்கு நடக்கிறத
- ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தினமும் கந்த புராண பாராயணம் நடந்து வருகிறது
வேலூர்:
வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41-ம் ஆண்டு மகா கந்தர் சஷ்டி மற்றும் 27-ம் ஆண்டு சூரசம்ஹார விழா, வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, கந்தர் சஷ்டி சஹஸ்ரநாம அர்ச் சனை, காலை 9 முதல் 10 மணி வரை நடக்கிறது. அதோடு, தினமும் கந்த புராண பாரா யணம் நடக்கிறது. மேலும், 30-ந் தேதி காலை 7.30-க்கு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்ககவசம் அலங்காரம் செய் யப்படுகிறது.
தொடர்ந்து, காலை 9 மணிக்கு ஸ்ரீசண் முகர் சிறப்பு அபிஷேகம் சத்ரு ஸம்ஹார திரிசதி, 11.30-க்கு சண்முக அர்ச் சனை, தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து, மாலை 6.30-க்கு கோட்டை மைதானத்தில் சூரசம்ஹார விழா பிரமாண்ட மாக நடக்கவுள்ளது.
இதையடுத்து,31-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல், ஸ்ரீமகா கந்தர் சஷ்டி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீஜல கண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.