என் மலர்
உள்ளூர் செய்திகள்
இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு போலி நாடகம்
- பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் பேட்டி
- 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில்பாஜக பட்டியல் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.இதில் கலந்துகொண்ட பட்டியல்அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பட்டியல் இன மக்களுக்காக பாஜக அரசு செய்த சாதனைகளை பட்டியல் இன மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இலவச வீடு போன்ற திட்டங்கள் மோடி தந்துள்ளார்.
பட்டியலின மக்களுக்காக பல்வேறு சாதனைகளை பாஜக அரசு செய்துள்ளது. திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு பட்டியல் சமுதாய மக்களுக்கு துரோகம் செய்கிறது.
சமூகநீதி பேசும் இவர்கள் பட்டியல் சமுதாயத்திற்கு எதிராக நடக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு கூர்நிதியை நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர்.
பட்டியலின மக்களுக்கான சிறப்பு கூர் நிதி திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்.திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை பஞ்சமி நிலத்தை மீட்போம் என்றார்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பஞ்சமி நிலத்தை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு போலி நாடகம். இந்தி அவர்களுக்கு மட்டும் தேவையாக உள்ளதுஆனால் ஏழை எளிய பொதுமக்களை இந்தி கற்க விடாமல் தடுக்கின்றனர்.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழே தெரியாது. 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. மாவட்ட தலைவர் மனோகரன் பொதுச் செயலாளர் ஜெகன் மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.