search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் 18 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்
    X

    வேலூர் மாவட்டத்தில் 18 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்

    • பறகுக்ம் படை கண்காணிப்பு
    • கலெக்டர் ஆய்வு

    வேலூர்:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 20 முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

    வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் 8 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அறைக்கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9,540 மாணவர்கள், 9,123 மாணவிகள் என்று மொத்தம் 18 ஆயிரத்து 663 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது தடுக்கவும் ஆள் மாறாட்டத்தை கண்டுபிடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 104 தேர்வு மையங்களை கண்காணிக்க 104 முதன்மை கண்காணிப்பாளர்கள், 104 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    அதைத்தவிர கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    வினாத்தாள்கள் 21 வழித்தடங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    தேர்வு தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சரியாக காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது.

    முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கும் 5 நிமிடம் அனுமதி வழங்கப்பட்டன. தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடந்து.

    தேர்வு மையங்களில் இருந்து முன்கூட்டியே மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் இருந்தனர். தேர்வு நடைபெறுவதையொட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 219 பள்ளிகளை சேர்ந்த 80200 மாணவர்களும் 8,149 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 499 பேரும், தனித் தேர்வர்கள் 844 பேர் என மொத்தம் 17 ஆயிரத்து 253 பேர் தேர்வு எழுதினார். தேர்வு எழுதுவதற்காக 70 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 15,302 மாணவர்களும் 14 ஆயிரத்து 621 மாணவிகளும் என மொத்தமாக 29,923 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

    இதற்காக மாவட்டத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகள் தேர்வில் வெற்றி பெற வழிபாடு செய்தனர்.

    மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் வெற்றி திலகமிட்டு வாழ்த்தி தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 219 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 260 மாணவர்களும், 8 ஆயிரத்து 149 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 409 பேரும், தனித்தேர்வர்கள் 844 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 253 பேர் தேர்வு எழுத உள்ளனர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் பள்ளி மாணவர்களுக்கு 67 தேர்வு மையங்களும், தனிதேர்வர்களுக்காக 3 தேர்வு மையங்களும் என மொத்தம் 70 தேர்வு மையங்கள் என மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 133 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79 மையங்களில்8,257 மாணவர்களும், 7,830 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 87 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

    Next Story
    ×