search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை பணியால் குண்டும் குழியுமாகி, புழுதி பறக்கும் வேலூர்-ஆற்காடு  சாலை
    X

    வேலூர் ஆற்காடு சாலையில் குண்டும் குழியுமான புழுதி பறக்கும் ரோட்டில் தட்டு தடுமாறி செல்லும் வாகனங்கள்.

    பாதாள சாக்கடை பணியால் குண்டும் குழியுமாகி, புழுதி பறக்கும் வேலூர்-ஆற்காடு சாலை

    • படாத பாடுபடும் வாகன ஓட்டிகள்
    • பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகரில் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஆற்காடு சாலையும் ஒன்று. இங்குள்ள மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருவதால் ஏராளமான ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    இதனால் தனியார் ஆஸ்பத்திரி முன்பு அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இது தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில்வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கால்வாய்கள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், கோட்டையை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. வேலூர் ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.

    இதனால் ரோடு தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.

    மெத்தனப் போக்கில் பணிகள் நடைபெற்று வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் தவறி விழுந்த சத்துவாச்சாரி வாலிபர் அரசு பஸ்சில் சக்கரத்தில் சிக்கி பலியானார். மேலும் பலர் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.

    இதனால் 20 முதல் 25 அடியாக சுருங்கிப்போன சாலையில் வாகன ஓட்டிகள் செல்லவும், பொதுமக்கள் நடமாடவும் வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக பள்ளி, கல்லூரி, வேலை செல்பவர்களுக்கு வேலூர் ஆற்காடு சாலையை கடக்க படாத பாடுபடுகின்றனர்.

    வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதி கிளம்புவதால் வீடு, கடைகளில் புழுதி படிந்து விடுகிறது.

    எனவே ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியும் வரை போலீசார் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஆற்காடு சாலையில் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Next Story
    ×