என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 115-ஐ ரத்து செய்திட வேண்டும்.
அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தவுடன் வழங்கிட வேண்டும். முடக்கப்பட்ட சரண் விடுப்பை வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
சிறப்புக்காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






