search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளுக்குடி அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
    X

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது.

    வேளுக்குடி அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

    • டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.
    • கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை தாங்கினார்.

    வேளுக்குடி ஊராட்சி தலைவர் நீலமணி பிரகாஷ், சித்தனக்குடி ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் ராசகணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்:-

    மாணவர்கள் பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசிப்பழக வேண்டும். பிழையின்றி தமிழ் எழுத அடிப்படையாக பாட நூல்களை கடந்து நிறைய நூல்கள் வாசிக்க வேண்டும்.

    இலக்கிய படைப்புகளை தந்த ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளிலேயே தனிச்சிறப்பு பெற்ற சொற்களை கொண்ட தஞ்சை வட்டார வழக்கு சொற்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.

    நிறைய திருமுறை பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள், நீதி இலக்கியங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் அறிவியல் ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

    Next Story
    ×