என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நடுவழியில் தவித்த சிறுமியை மீட்ட வேப்பூர் போலீசார்
- நடுவழியில் தவித்த சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
- எங்கே செல்வது என்று தெரியாமல் வேப்பூர் கூட்டு சாலையில் அழுது கொண்டு இருந்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மேற்கு மாவட்டம் வேப்பூர் கூட்டு சாலையில் தனிமையில் அழுது கொண்டிருந்த 12 வயது சிறுமியை வேப்பூர் போலீஸ் ஏட்டு தென் எழிலன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்தார். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா சிறுமியிடம் விசாரணை செய்தபோது, சிறுமி திட்டக்குடி வட்டம் கல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிழக்கு தெருவில் வசித்து வரும் நல்லதம்பி -சங்கீதாவின் தம்பதி மகள் நவநீதா என்றும், அவர் மா.புடையூர் சந்ததோப்பு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார் என தெரிவித்தார். சிறுமியின் தந்தை நல்லதம்பி சென்னையில் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார் என்றும், சிறுமி நவநீதாவின் பாட்டி பவுனு என்பவர், தனது உறவுக்காரர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சிறுமியின் பாட்டி பவுனு, சிறுமியின் அத்தை உமா, மற்றும் சிறுமியின் தம்பி குரல்எழிலன் ஆகிய 3 பேரும் கல்லூர் கிராமத்திலிருந்து சென்னைக்கு சென்றுள்ளனர். இதனால் நானும் சென்னைக்கு வருகிறேன் என்று சிறுமி நவநீதா அழுதுள்ளதாகவும், நீ வர வேண்டாம் அம்மாவுடன் வீட்டில் இரு, என்று கூறிவிட்டு, சென்றுவிட்டனர்.
மேலும் சிறுமி நவநீதாவின் தாய் சங்கீதா மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுமி நவநீதா, தனது பாட்டியிடம் சென்னைக்கு செல்லும் எண்ணத்தில் கல்லூர் கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேப்பூர் கூட்டு சாலை வரையில் நடந்தே வந்ததாகவும் கூறியுள்ளார். பிறகு அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் வேப்பூர் கூட்டு சாலையில் அழுது கொண்டு இருந்துள்ளார். அப்போது வேப்பூர் காவல் நிலையத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தென்எழிலன் என்பவர் சிறுமி நவநீதாவை அழைத்து வந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்துள்ளார்.