search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்   வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணிபொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணிபொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 ஜனவரி 1-ந்தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனையொட்டி முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும், முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரி பார்க்க உள்ளனர். இப்பணி வருகிற ஆகஸ்ட் மாதம் 21- ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் மற்றும் 100 சதவீத தூய்மையாகவும் முடிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கூறியுள்ளார்.

    Next Story
    ×