என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகைக்கு மிக கனமழை எச்சரிக்கை: அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள்
- பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாகை மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுக்காட்டு துறை, கோடியக்கரை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் அவசர, அவசரமாக இன்று காலை கரை திரும்பி வருகின்றனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அவசர, அவசரமாக கரை திரும்பியதால் மீன்கள் எதுவும் இன்றி ஏமாற்றத்துடன் வந்தடைந்தனர்.
மேலும், இதன் எதிரொலியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வில்லை. இதனால் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.