search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார்.

    கோட்ட செயலாளர்கள் ஜெகதீஷ், டோனிபிரிட்மேன், சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இணை செயலாளர் சாமி. கோவிந்தராஜ் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தமிழ்வாணன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்ட பாணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி6-வது ஊதியக்குழுவில் வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணிஜெயந்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×