என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாப்பாக்குடி ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
Byமாலை மலர்29 Oct 2022 2:53 PM IST
- பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார்.
முக்கூடல்:
பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகள், கோழி ஆகியவற்றிற்கு சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டது. சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளை மருத்துவத்திற்காக மக்கள் கொண்டு வந்தனர்.
கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார். முக்கூடல் கால்நடை உதவி மருத்துவர் ஹேமாசாயி, அத்தாள நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் முயல்வி ஆகியோர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை உதவியாளர் தர்மலிங்கம் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×