search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தால் நமது மாநிலத்திற்கு பெருமை- விஜய் வசந்த் எம்.பி.
    X

    (கோப்பு படம்)

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தால் நமது மாநிலத்திற்கு பெருமை- விஜய் வசந்த் எம்.பி.

    • இந்த பயணம் தேசிய சர்வதேச அளவில் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.
    • இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்துவர்களுக்கு நன்றி.

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி.விஜய்வசந்த் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவில் ஒற்றுமையை நிலைநிறுத்தவும், இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் தேசிய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறுகிறது.

    7ஆம் தேதி பொதுக் கூட்டத்துடன் குமரியில் ஆரம்பித்த பயணம் 8,9,10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பயணம் தேசிய சர்வதேச அளவில் நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.

    இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து ஒத்துழைப்பும் தந்த கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே.டி.உதயம், டாக்டர் பினுலால் சிங், நவீன் குமார், வட்டார, நகர, பஞ்சாயத்து தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் எனதருமை தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.


    மேலும் அனைத்து ஒத்துழைப்பும் அளித்த காவல்துறை அதிகாரிகள், காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம், மாநகர, நகர, பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது நன்றி.

    பொதுமக்களுக்கு மிக முக்கியமாக நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பெருந்திரளாக கூடி தலைவர் ராகுல் காந்தி அவர்களை அன்புடன் வரவேற்ற குமரி மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    Next Story
    ×