என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டத்தில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
சேஷமூலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
- இலவச பட்டா வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.
அப்போது, சேஷமூலை ஊ.ஒ.தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும். இலவச பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்கள் முன்வைத்தனர்.
அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென எம்.எல்.ஏ கூறினார்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சரக வருவாய் ஆய்வாளர், உதவி பொறியாளர் மற்றும் தென்பிடாகை, சேஷமூலை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story






