என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையத்தில் கிராமிய சேவைத்திட்டம் தொடக்கவிழா
- கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் கிராமிய சேவைத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது
- விழாவில் மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு குறித்து பேசப்பட்டது.
கடையம்:
கீழக்கடையம் ஊராட்சிக்குட்பட்ட கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் சோகோ நிறுவனம் இணைந்து நடத்திய கிராமிய சேவைத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. நெல்லை மண்டல தலைவர் அண்ணாமலையார் தலைமை தாங்கினார். சோகோ நிறுவனத்தை சேர்ந்த கீர்த்தி வாசன், ராச சுடலைமுத்து, பாலமுருகன், முத்து, அரசு ஈஸ்வரன், பூமிபாலகன், சுடலையாண்டி பிள்ளை ,கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், துணைத் தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கிராமிய சேவைத்திட்டத்தின் நோக்கமாக நோயற்ற வாழ்வு, கல்வியில் மேன்மை சுற்றுப்புற தூய்மை, முதியோரை பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு குடும்ப அமைதி, கர்ம யோக வாழ்க்கை நெறி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு போன்றவை குறித்து பேசப்பட்டது. இதில் சமூக ஆர்வ லர் சந்திரசேகர், வார்டு உறுப்பினர்கள் வீரசுமதி, ஏஞ்சல் மேரி, வசந்த், கவிதா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.