search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமமக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கிராமமக்கள் சாலை மறியல்

    • பல கிராமங்களில் மின்சார வசதிகள் இல்லை.
    • மாற்று வழியாக பவர் என்ஜின் பொருத்தப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 -11 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் இயல்புநிலை முடங்கியது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் வயல்வெளிகள் நீரில் மூழ்கின.

    இரண்டு லட்சத்து 35 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த 10- தேதி முதல் தற்போது வரை பல கிராமங்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றன.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டடம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அடுத்து மடப்புரம் ஊராட்சியில் 5 நாட்களாக மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் இருளில் முழ்கியது.

    அப்பகுதி கிராம பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாத நிலையில் ஊராட்சி மற்றும் அரசையை கண்டித்தும், மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் பொதுமக்கள் மயிலாடுதுறை தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டம் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உயர் மின்னழுத்தம் கம்பிகள் சாய்ந்து கிடப்பதால் இதனை சரிசெய்து தர ஒருவார காலம் ஆகலாம். மாற்று வழியாக பவர் இன்ஜின் பொருத்தப்படும்.

    மேலும் குடி நீர் வாகனங்களில் கொண்டுவந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×