என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடமதுரை அருகே மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்
- மீன்பிடி திருவிழாவில் குளத்தில் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர்.
- சமுதாய ஒற்றுமைக்காக நடத்தப்படும் இந்த திருவிழாவில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள காணப்பாடி கிராமத்தில் மந்தைகுளம் உள்ளது. இங்கு மீன்குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகளவு இருந்ததால் மீன்கள் அதிகளவில் காணப்பட்டன. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதனைதொடர்ந்து ஊர்நாட்டாமை ராம லிங்கசேதுபதி தலைமையில் இன்று கிராமமக்கள் மந்தைகுளத்தில் ஒன்றுகூடினர். நாட்டாமை கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். காணப்பாடி ஊராட்சி தலைவர் பாண்டி, முருகேசன் மற்றும் ஊர்முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
குளத்தில் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர். சிறுவ ர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் உற்சாகமாக கலந்து கொண்டனர். கெண்டை, கெழுத்தி, ரோகு உள்ளிட்ட பல்வேறு மீன்கள் அதிகளவில் கிடைத்தன. அதனை பிடித்து சென்ற பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைத்து சாப்பிட்டனர்.
சமுதாய ஒற்றுமைக்காக நடத்தப்படும் இந்த திருவிழாவில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படாது என்றும், அதனை தங்கள் சொந்த தேவைக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.