என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு, விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்
    X

    உளியாகம் பகுதியில் கருப்பு கொடியை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை படத்தில் காணலாம்.

    வீடு, விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்

    • கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான வீட்டு மனை பட்டா, விவசாய நில பட்டா மற்றும் அரசின் அனைத்து சலுகை களையும் வழங்க வேண்டும்.
    • இதுவரை எந்த வித அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஓசூர்,

    ஓசூர் தாலுக்கா சென்ன சந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்ன சந்திரம், மாரசந்திரம், உளியாளம் உள்ளிட்ட 7 கிராமங்களில் 8000-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான வீட்டு மனை பட்டா, விவசாய நில பட்டா மற்றும் அரசின் அனைத்து சலுகை களையும் வழங்க வேண்டும் என பல்வேறு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து இன்று காலை உளியாளம் கிராமத்தில், மக்கள் தங்கள் வீடுகளின் மீது கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புக் கொடி ஏந்தியும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×