search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழா:  கடலூரில் பூஜை பொருட்கள், பழ வகைகள் விற்பனை மும்முரம்
    X

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடலூர் உழவர் சந்தை முன் பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்ற காட்சி.

    விநாயகர் சதுர்த்தி விழா: கடலூரில் பூஜை பொருட்கள், பழ வகைகள் விற்பனை மும்முரம்

    • ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, விளாம்பழம், பேரிக்காய், கம்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
    • கடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கோலகலாமாக கொண்டா டப்பட உள்ளது. கடலூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பா திரிப்புலியூர் உழவர் சந்தை, முதுநகர், கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து சதுர்த்தி விழாவுக்கு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகருக்கு படையல் இடுவதற்காக வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, விளாம்பழம், பேரிக்காய், கம்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்

    இதனை தொடர்ந்து பொரி, கடலை, சுண்டல் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் கடைகளில் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பயன்படும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனையும் தீவிரமாக நடந்தது. கடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. சிலையின் அளவை யொட்டி விற்பனை செய்யப்பட்டது. வீட்டில் வைத்து வழிபட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் அலங்கார வண்ண குடைகளையும் சிலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும், அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலைகள் விற்பனையும் நடந்தது. இதனை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். பூஜை பொருட்கள் வாங்கு வதற்காக கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர் கடை வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×