என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், முத்துப்பல்லக்கில் விநாயகர்- முருகன் வீதி உலா
- 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர்.
- தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நேற்று தொடங்கியது.
தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெரு மான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேல அலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் எழுந்தருளினர்.பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவ மைக்கப்பட்டு இருந்தன.
பல்லக்குகள் அனைத்தும் தெற்கு வீதி, கீழவீதி ,மேல வீதி, வடக்கு வீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தன.
அப்போது தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முத்து பல்லுக்கு வீதி உலாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இரவில் தொடங்கிய வீதி உலா விடிய விடிய இன்று காலை வரை நடைபெற்றது.
வீதி உலா முடிந்த பின்னர் மீண்டும் பல்லக்குகளில் இருந்து
சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்ற டைந்தன.