என் மலர்
உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை
- விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
- இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புளிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது65). இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். அதனை பார்த்த அவரது மனைவி ராமு விரைந்து வந்து தடுக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டார். உறவினர்கள் உடனடியாக அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன்(45). இவரது மனைவி, குழந்தைகள் மதுரையில் வசித்து வருகின்றனர். வெள்ளையன் தனது தாயாருடன் வசித்து வந்தார். வெளியூர் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் எறும்பு பொடி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெள்ளையனின் சகோதரர்கள் பழனிசாமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.