என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இருஞ்சிறை பெரிய கண்மாயை புனரமைப்பு செய்ய கோரிக்கை
- நரிக்குடி அருகே இருஞ்சிறை பெரிய கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும்.
- விவசாயிகள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பள வில் பெரிய கண்மாய் உள்ளது. இது பொதுப் பணித் துறையால் பராம ரிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து இருஞ்சிறை, வடக்குமடை, செங்கமடை, தர்மம் உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இருஞ்சிறை கண்மாய் பகுதியில் பெரியமடை, கருதாமடை, தாழிமடை என 5 க்கும் மேற்பட்ட மடைகள் இருப்ப தாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு தோறும் கிருதுமால் விவசாய பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விரகனூர் அணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து உளுத்திமடை, கட்டனூர் வழியாக இருஞ்சிறை பெரிய கண்மாயை வந்தடைகிறது.
இந்த நிலையில் கண்மாய் மடைகள், அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் பல வருடங்களாக தூர்வா ராமல் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கண்மாய் பகுதியின் சில மடைகள் சேதமடைந்தும், பெரும்பாலான மடைகளில் துடுப்புகள் இல்லாமலும் இருப்பதால் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போது அது வீணாக வெளியேறி அருகிலுள்ள தரிசு நிலங்க ளுக்கு செல்வதாகவும், இதனால் கண்மாய் நீர் முழுமையாக விளை நிலங்களுக்கு சென்று சேர்வதில்லை என விவசாயிகள் தெரிவிக் கின்றனர்.
இது குறித்து பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது. முக்கிய பாசன ஆதார மாக உள்ள இந்த கண்மாயை தூர்வாரு வதற்கு போதிய நிதி ஆதாரமில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், வழக்கம் போல விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
மேலும் கடந்த முறை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீர் வெளியேறாமல் இருக்க விவசாயிகள் மணல் மூட்டைகளை மடைக ளுக்குள் அடுக்கி அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இருஞ்சிறை கண்மாய்க்கு மீண்டும் தண்ணீர் வந்தாலும் வீணாக வெளியேறி விவசாயத்திற்கு பயன்படாமல் வறண்டு போகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த வருடம் வைகை அணை திறக்கப்பட்டு இருஞ்சிறை கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் விவசாயம் முடிந்து 4 மாத தண்ணீர் இருந்தும் சேதமடைந்த மடைகளால் கண்மாய் நீரானது வீணாக வெளியேறி விட்டதாகவும், தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி சரிவர சீரமைக்கப்படாத காரணத்தால் புதர்மண்டி கிடப்பதாகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் இருக்கும் பகுதியானது தடம் தெரியாமல் போனதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இருஞ்சிறை பெரிய கண்மாயை நம்பி 10 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சுமார் 1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர் செய்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகளின் அலட்சி யத்தால் கண்மாய் பகுதி செப்பனிடப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், 1990-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரை விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டிய உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே பொதுப்பணி துறையினர் இதை கவனத்தில் எடுத்து அனைத்து மடைகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த மடைகள், கால்வாய்களை தேவையான நிதி ஒதுக்கீடு செய்து சீரமைத்து தர வேண்டும் எனவும், கண்மாயில் தண்ணீர் சீராக செல்லவும், வீணாக தண்ணீர் வெளியேறாத வகையிலும் கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்