என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/10/1847410-valakkupathivu.webp)
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அப்போது சந்தனமாரியப்பன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள வடகரை நயினாபுரம் காலனியை சேர்ந்தவர் சுடர்கொடி(வயது23). இவருக்கும் செந்தட்டி யாபுரத்தை சேர்ந்த சந்தனமாரியப்பன்(26) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுடர்கொடி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 2019-ம் ஆண்டு எனது கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதோடு என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் வேலுசாமி- லட்சுமி இருந்தனர்.
இதையடுத்து நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். சம்பவத்தன்று திரும ணத்தின் போது எனக்கு அணிவித்த நகையை கேட்க சென்றேன். அப்போது சந்தனமாரியப்பன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் எனக்கு தெரியாமல் அவர் 2-வது திருமணம் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் விசாரணை நடத்தி சந்தனமாரியப்பன், அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.