என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உரிமமின்றி பால் பொட்டலங்கள் விற்ற வணிகர்கள் மீது நடவடிக்கை
- உரிமமின்றி பால் பொட்டலங்கள் விற்ற வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளில் பால் வியாபாரிகள் தரமற்ற எடை அளவைகளை உபயோகப்படுத்துவதாக தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 21-ந் தேதி ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பஞ்சு மார்க்கெட், ரெயில்வே பீடர் ரோடு பகுதிகளிலும், 24-ந்தேதி சூலக்கரை, முத்துராம்பட்டி அல்லம்பட்டி, பாண்டியன் நகர், மல்லாங்கிணறு ரோடு பகுதிகளிலும் கூட்டாய்வு செய்தனர்.
இந்தக் கூட்டாய்வில் விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வர் சதாசிவம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் உதவி ஆய்வர்கள் தயாநிதி, துர்கா, பிச்சைக் கனி ஆகியோர் ஈடுபட்டனர். இதில் எடையளவுகளை
உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வந்த ஒரு வணிகர் மீதும், எடை அளவுகள் மறுமுத்திரையிடப்பட்ட தற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வண்ணம் வெளிக்காட்டி வைக்காத 1 வணிகர் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சட்டமுறை எடையளவு. (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் உரிமம் பெறாமல் பால் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்ததாக ஒரு வணிகர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
மேலும் மறுமுத்திரையிடப்படாத 18 ஊற்றல் அளவைகள் பொதுப் பறிமுதல் செய்யப்பட்டது. ஊற்றல் அளவைகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்திரையிடப்பட வேண்டும். எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு, 2009ஆம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம். குற்றச்சாட்டிற்கு ரூ.25,000/-வரை அபராதமும், இரண்டாம் மற்றும் அதற்கு அடுத்த சூற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562-225130 என்ற தொலைபேசி எண்ணிலோ, தொழிலாளர் உதவி ஆணையர், 1/13 சி, ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
இந்தத் தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்