என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் ஜெயபாலன் மற்றும் மதுரை தொழிலாளர் இணை சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டு தலின்படியும் விருதுநகர், ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான
15-ந்தேதி கூட்டாய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958-ன்படி, சுதந்திர தினம் அன்று (ஆக.15) அன்று கடைகள், நிறுவ னங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும்.
இந்த தினத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும் தொழி லாளர்களிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று விடுமுறை தினத் திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை முரணாகவும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 50 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவகங்கள் மற்றும் 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 84 நிறுவனங்களில் கூட்டாய் வின்போது முரண்பாடு கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சுதந்திர தினத் தன்று பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனுதாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை விருது நகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்