search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஒன்றிய கவுன்சிலர்
    X

    திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஒன்றிய கவுன்சிலர்

    • திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் வலியுறுத்தினார்.
    • இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகரிடம் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சி லர் சரோஜா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கூரைக்குண்டு பஞ்சாயத்து சாத்தூர் ரோடு நான்கு வழிச்சாலை அருகே புதிய சமுதாயக்கிணறு கடந்த 2020-21ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கிணற்று நீரை முத்துராமலிங்கம் நகர், நிறைவாழ்வு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    சமுதாய கிணற்றில் இருந்து கோடைகால தேவைக்கு குடிநீர் விநியோ கம் செய்ய முடியாத நிலையில் அது காட்சி பொருளாக உள்ளது.

    எனது முயற்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் பாலம்மாள் நகர் பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதற்காக மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மேற்படி பணி நடைபெறா மல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கூரைக்குண்டு பஞ்சாயத்தில் 1, 4-வது வார்டு பகுதிகளான முத்துராம லிங்கம் நகர், பாலம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் இதுவரை கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. மேற்படி பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை.

    இதனால் எனது 9-வது வார்டு பகுதியின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பாக கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×