search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் பயணிகள் வசதி குழு பரிந்துரைத்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு
    X

    ரெயில் பயணிகள் வசதி குழு பரிந்துரைத்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

    • ரெயில் பயணிகள் வசதி குழு பரிந்துரைத்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்த மார்ச் மாதம் ரவிச் சந்திரன் தலைமையிலான பிற மாநில உறுப்பினர்கள் அடங்கிய ரெயில் பயணிகள் வசதிக்குழு ஆய்வு செய்தது. அப்போது நாங்கள் கொடுத்த கோரிக்கைகளின் படி ரெயில் நிலைய கிழக்கு பகுதியில் நுழைவுவாயில், அனைத்து நடைமேடைகளும் மேம்படுத்துதல், நகரும் படி வசதி, குடிநீர் வசதி, நவீன தங்கும் அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய் வதற்கு ரெயில் பயணிகள் வசதிகள் குழு பரிந்துரைத்ததின்பேரில் தற்போது அதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இதில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடியே 73 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பிரத மர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். இப்பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து பணிகளை மேற்கொண்டு விருதுநகர் ரெயில் நிலையம் உலக தரத்தில் மேம்படும் என்பது உறுதி. இதற்காக பிரதமர் மோடி, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மதுரையில் இருந்து அருப் புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில் பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது. திட்ட பணியை விரைந்து முடித்து தென் மாவட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உதவ வேண்டும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில நிர்வாகிகள் மூலம் மத்திய அரசிடம் வலியு றுத்துவோம். உறுதியாக திட்டம் கைவிடும் வாய்ப்பு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×