search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெறும் யானை
    X

    ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெறும் யானை

    • ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெறும் யானையை வனத்துறையினர் பராமரிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
    • யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்த வர் சேக் முகமது. இவர் 56 வயதான லலிதா என்ற யானையை வளர்த்து வருகிறார்.

    கடந்த ஜனவரி 1-ந் தேதி இந்த யானை தேனி மாவட்டத்தில் இருந்து கோவில் விழாவிற்காக விருதுநகர் கொண்டு வரப்பட்டது. அந்த யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது. இதில் யானைக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்த வனத்துறையினர், யானையை உரிமையாளர் ராஜபாளையத்திற்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கவில்லை. அந்த யானையை விருதுநகர் ரெயில்வே காலனி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கட்டிவைத்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அதன் காயங்கள் ஆறாமல் உள்ளது என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்குமாறு வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி, மேகமலை வனச்சரகர் துணை இயக்குநர் திலிப்குமாருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அந்த யானையை பராமரிப்பதற்கு ஆகும் செலவை யானையின் உரிமையா ளரிடம் இருந்து அபராதமாக பெற்று விருதுநகரிலேயே யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க அறிவுரை வழங்கி உள்ளார்.

    இந்தநிலையில் விருதுநகரில் சிகிச்சை பெற்று வரும் யானையை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டார். அப்போது அவர் யானையின் பராமரிப்பு, அதற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தார்.

    Next Story
    ×