search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகள் நிழற்கூடத்தை வீடுபோல் பயன்படுத்தும் மூதாட்டி
    X

    பயணிகள் நிழற்கூடத்தில் மூதாட்டி வைத்திருக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.

    பயணிகள் நிழற்கூடத்தை வீடுபோல் பயன்படுத்தும் மூதாட்டி

    • நரிக்குடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடத்தை வீடுபோல் மூதாட்டி பயன்படுத்துகிறார்.
    • பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    பயணிகள் நிழற்கூடம் அருகே பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவிந்து கிடக்கும் காட்சி.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து பஸ் பயணிகள் மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன் படுத்தி வருகிறார்.

    அவர் இந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரும் அமர விடாமலும், அவதூறாக பேசி யும் வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மூதாட்டி நரிக் குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருப்ப தால் அதிலிருந்து வரும் துர்நாற்றங்களால் நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன், பயணிகளும் முகம் சுழித்து வருகின்றனர்.

    பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும் நிழற்குடைக்குள் அமர விரும்பாமல் மூக்கை பிடித்துக்கொண்டு மணிக் கணக்கில் நிழற்குடைக்கு வெளியி லேயே வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து நரிக்குடி ஊராட்சி நிர்வாகமும், சுகா தாரத்துறை அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிக ளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட் களை ஒழிக்க பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் நரிக்குடி பஸ் நிலையத்தில் பொது இடத்தில் பிளாஸ்டிக் பொருட் களை குவித்து வைத்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வரும் மூதாட்டியை பஸ் நிலை யத்தில் இருந்து அகற்றுவதுடன், அவரது உறவினர்கள் அல்லது காப்பகத்தில் சேர்க்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் நரிக்குடி பஸ் நிலையத்தை பொதுமக்கள் மற்றும் பயணிகளின் முழு மையான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×