என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் வட மாநில வாலிபர் கைது
- ராஜபாளையத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வட மாநிலத்தவர்கள் தங்கி பணி செய்யும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ராஜபாளையம்
ராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகை நகரில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. பிரதான சாலை என்பதாலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி என்பதாலும் இந்த ஏ.டி.எம். மையத்திற்க்கு காவலர் நியமிக்கப்படவில்லை.
இதனை நோட்டமிட்ட வட மாநில வாலிபர் கடந்த 18-ந் தேதி காலை ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கருவியை சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்.
அந்த கருவியை சேதப்படுத்தும் போது சத்தம் வரவே கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பினார்.
அக்கம் பக்கத்தினர் ஏ.டி.எம். எந்திரத்தை பார்த்த போது அது சேதப்ப டுத்தப்பட்டுள்ளதும், கொள்ளையடிக்க முயற்சித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) சபரிநாதன் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் தங்கி பணி செய்யும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
தீவிர தேடுதல் வேட்டையில் பொன்ன கரம் பகுதியில் கட்டிட வேலைக்காக 10 நாட்க ளுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த பீகார் மாநிலம் சோமனப்பள்ளி தாலுகா விற்கு உட்பட்ட பூர்ணியா ஜில்லாவைச் சார்ந்த ராஜு ரிஷிதேவ் என்பவரது மகன் சதானந்த் என்பவன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.