search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு
    X

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் மதுரையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு

    • நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக "நான் முதல்வன்" என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.

    இந்த திட்டம் ஆங்கிலம் பேசும் வகுப்புகள், குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ், வெளிநாட்டு மொழி வகுப்புகள், பாரம்பரிய தமிழ்நாடு கலாச்சார வகுப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய தலைப்புகளை வழங்குவது, தொழில் முறை ஆலோசனைகளை வழங்குவது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டுமென்ற நோக்கில் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் அரசு உதவு பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில், அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், இந்த திட்டத்தை செயல் படுத்தும் வகையில் 1500 மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிவகாசி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் மதுரையில் உள்ள தியாக ராஜர் பொறியியல் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரிகளுக்கு இலவச பஸ் மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்து அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்த மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள உயர்கல்வியில் உள்ள வாய்ப்புக்கள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்புக்கள், உயர்கல்வி யில் உள்ள துறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வைகள் குறித்து நேரடியாக சென்று அவர்கள் அறிந்து, தெரிந்து கொள்ளும் வகையிலும், உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கும் வகையிலும், கல்லூரி நிர்வாகத்தால் எடுத்து ரைக்கப்பட்டு, விழிப்பு ணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×