என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/04/07/1862126-121.gif)
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
- திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர்.
விருதுநகர்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது42). இவர்களது அண்ணன் இவரது அண்ணன் சோமு (53). இவர்களுக்கு விருதுநகர் அருகே உள்ள பாவாலி சங்கரநாராயணபுரத்தில் பூர்வீக வீடு உள்ளது. இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக சென்றனர்.
திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர். அங்கு வைத்து சுந்தர், சோமு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது குடும்பப் பிரச்சனை தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சோமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரை குத்தினார்.
உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுந்தரின் மகன் அரவிந்த் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சோமுவை கைது செய்தனர்.