search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம்
    X

    புதிய ரெயில்வே மேம்பாலத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம்

    • பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும்.
    • தொடர் முயற்சி எடுத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி வழியாக வெம்பக்கோட்டை வரை செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இங்கு அடிக்கடி ரெயில்கள் கடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உரிய நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர்.

    எனவே ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அப்போதைய அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றது.

    அப்போது ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்கப் பாண்டியன் மேம்பாலத்தை கட்டிமுடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் எடுத்த முயற்சியால் மேம்பால பணிகள் வேகமெடுத்தன. பல இடையூறுகளுக்கு இடையே ராஜபாளையம்-சத்திரப்பட்டி மேம்பால பணிகள் தற்போது 99 சதவீதம் முடிந்ததுள்ளன.

    இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் பொது மக்கள் வாகனங்கள் ஓட்டி யும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். புதிய மேம்பா லத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். விரைவில் புதிய ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் முறையாக திறந்து வைப்பார் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிகளை முடிக்க தொடரும் முயற்சிகளை எடுத்த எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×