என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சதுரகிரி கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூல்
- சதுரகிரி கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூலானது.
- ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மாதத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த மாதம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வர் சடவர்ம பூபதி முன்னிலையில் சதுரகிரி மலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. அதில் ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.