என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களை ஊக்குவிக்க கலெக்டர் வேண்டுகோள்
- கைத்தறி துணிகளை வாங்கி அனைவரும் நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது இதை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் நாள் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் அ டிப்படையில், விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில், 40எஸ், 60எஸ், 80எஸ் ரக பருத்தி சேலைகள், செயற்கை இழை பட்டுச் சேலைகள், கைத்தறி லுங்கிகள், வேட்டிகள், துண்டுகள், போர்வை ரகங்கள் ஆகியவை அரசு வழங்கும் 20 சதவீத தள்ளுபடி மானியத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 10 பயனா–ளிகளுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 10 நெசவாளர்களுக்கு ஒப்பளிப்பு ஆணைக–ளையும், முத்ரா கடனுதவி திட்டத்தின்கீழ், 10 நெசவாளர்களுக்கு கடனுதவிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார். கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் உள்பட பலர்கலந்து கொண்டனர்.