search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    சிவகாசி யூனியன் எரிச்சநத்தம் ஊராட்சியில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கியை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • சிவகாசி, வத்திராயிருப்பு யூனியன்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரிச்சநத்தம் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கி யை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் நியாயவிலை கடையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.31.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதே கிராமத்தில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக ளையும், கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.24.900 லட்சம் மதிப்பீட்டில், வரத்து கால்வாயில் உறிஞ்சி குழி அமைக்கப்பட்ட பணியை யும், 100 நாள் வேலை திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.மூவரை வென்றான் ஊராட்சி இந்திரா காலனியில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும், வடுகப்பட்டி ஊராட்சி களத்தூர் கிராமத்தில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.995 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும், குன்னூர் ஊராட்சியில்

    15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.1.570 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.25 ஆயிரம் மதிப்பில் கால்நடை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்ட பணியையும், ரூ.30 ஆயிரம் மதிப்பில் வட்டார நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, வேளா ண்மைத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் உமா மகே சுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×