search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் யூனியனில் நடைபெறும்  வளர்ச்சி பணிகள்
    X

    விருதுநகர் யூனியன் தம்மநாயக்கன்பட்டியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை அரசு சிறப்பு செயலாளர் ஹர்சஹாய் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்

    • விருதுநகர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு செய்தார்.
    • ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி, கன்னிசேரிபுதூர், வி.முத்து லிங்காபுரம், பாவாலி, கூரைக்குண்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தம்ம நாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.30 லட்சம் மதிப்பில், பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு குழந்தை களுக்கு முறையாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.

    அதே பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய புதிய கட்டடப் பணிகளையும், கன்னிசேரிபுதூரில் ரூ.2.40 லட்சம் மதிப்பில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டுள்ளதையும், அந்த பகுதியில் ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    வி.முத்துலிங்காபுரத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பாவாலி ஊராட்சியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரணி அமைக்கப்பட்டுள்ள தையும், கூரைக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.3.15 மதிப்பில் நர்சரி கார்டன் மற்றும் கிணறு மறுசீரமைப்பு பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி, அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சாந்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×